- நெப்போலியன்
மீன் பிடிக்கக்
குளக்கரை சென்றேன்
செழித்த மீன்கள்
இருக்கும் பக்கமாய்த்
தூண்டிலும் போட்டேன்.
ஒவ்வொரு முறையும்
தக்கை இழுபட...
தவளை
தண்ணீர்ப்பாம்பு
மடங்கிய செருப்பு
மக்கிய சாக்கு
உடைந்த பிளாஸ்டிக் வாளி
ஊறிய உள்ளாடை
என
வந்ததில்
ஒன்றுகூட
மீன்களாய் இல்லை!

