ஒவ்வொரு நாளும் பூக்கள் புதியது
ஒவ்வோர் வாரமும் திங்கள் புதியது
ஒவ்வோர் ஆண்டும் பெயரும் புதியது
ஒவ்வோர் புதியதும் உற்சாகம் தருவது!
புதிதாய் வருவது அனைத்தும் இனியது
புலரும் வானம் கதிரவன் இனியது
கடந்து போகும் மேகம் இனியது
கரைந்து உருகும் மழைத்துளி இனியது!
பழையன கழிதலும் புதியன புகுதலும்
மகத்துவம் நிறைந்தது மனதிற்கு இனியது
நடந்ததை மறந்தால் நடப்பது இனியது
கசப்பை மறந்தால் எல்லாம் இனியது!
பார்வையில் புதியது உள்ளத்தில் இனியது
உள்ளம் பூரித்தால் சுற்றமும் இனியது
சுற்றமும் இனிக்க நட்பும் இனிக்க
ஒவ்வோர் நொடியும் புதியது! இனியதே!
- அனுபமா உதிவ்

