தைப்­பூ­சம்!

தைப்­பூ­சம்!

1 mins read
e2008f9d-e025-47df-9998-7df3c758e4fd
-

- அனு­பமா உதிவ்

அறு­படை வீடெ­லாம் ஆறு­தல்­தரு அம­ரேசா!

ஏழாம்­படை வீடா­கச் சிங்­கை­வரு கும­ரேசா!

எட்­டாம்­படை வீடா­கப் பத்­து­மலை பால்­முகா!

ஒன்­ப­தாம்­படை வீடான தண்­ணீர்­மலை பொன்­முகா!

மாச­மாம் தையிலே பூச­மெ­னும் மீனிலே

வீசு­முழு நில­வில்­நறு வாசம்­செய் வேலவா!

ஈச­னின் உடுக்­கையே பேசு­கின்ற முன்­னமே

சாமி­மலை தந்­தைக்கு உப­தே­சப் பிர­ணவா!

மந்­தி­ரத் திருப்­பு­கழ் மன­மா­றப் படிப்­போரை

எந்­திர உல­கி­னில் நோய்­தீர்த்த மயி­லூரா!

தந்­தி­ரத்­தில் வீழந்­திட தன்­க­ரத்­தால் வணங்­கிய

சுந்­த­ரத்­த­மிழ் அரு­ண­கி­ரிக்­குத் தந்­த­ருள் வய­லூரா!

சுட்­ட­ப­ழம் சுடாப்­ப­ழம் கேள்­வி­யின் தமிழ்க்­கு­மரா!

ஔவைக்கு ஞானப் பழ­மான பழ­னி­யப்பா!

திருப்­ப­ரங் குன்­றமே! செந்­த­மிழ் மன்­றமே!

செவ்­வடி பற்­று­வேன் சேவற் கொடி­யோனே!