மனையாள்

மனையாள்

1 mins read
ef3cce13-3428-4b15-8594-3bd766a3c12b
-

- இரா சத்திக்கண்ணன்

அசுரவேகத்தில் வீசுகிறது

புயற்காற்று

புழுதியை சுழற்றி சுழற்றி

விண்ணுக்கு ஏற்றுகிறது

பூகம்பம் நிகழும்

அளவுக்கு வீசுகிறது

மரங்களை அடியோடு

வெட்டிச் சாய்க்கிறது

இடியோடு கூடிய

மழையும் கொட்டுகிறது

பிரபஞ்சத்தை பிளக்கும்

அளவிற்கு சத்தம் வேறு

ஆண்டாண்டு காலமாய்

உயர்ந்து நிற்கும்

மலைகளும் நடுங்குகிறது

அமைதியாய் பயணிக்கும்

நதிகள் நடுங்குகின்றன

பறவைகள்

விலங்குகள்

மற்ற உயிர்கள் யாவும்

பயந்துபோய்

செய்வதறியாமல்

உறைந்து நிற்கின்றன

இத்தனைக்கும்

நடுவே

எதற்கும் தளராமல்

எதற்கும் அஞ்சாமல்

மிகுந்த பொறுமையோடு

மிகுந்த அன்போடு

வாசத்தையும் விட்டுக்கொடுக்காமல்

புவியை காத்தபடி

புன்னைகைக்கிறது

புனித மலரொன்று

என் மனையாளாய்...

வெட்கித்தலைகுனிகிறது

புயற்காற்று

என்னைத்தழுவியபடி...