பசி

1 mins read
0dc3f5bd-e86f-4322-93d3-891f2b110877
-

- சிவப்பிரியா

உணவைத் தேடி அலையும்

சிறுபிள்ளை கொண்ட பசி

அதைப்போல் எதிரி

ஒருவனும் இல்லை

என்னை வீழ்த்த

தாக்காமல் நிலைகுலைகிறேன்

தாமதிக்காமல் ஒத்துக்கொள்ள

முயல்கிறேன் தோல்வியை!

பத்தும் பறந்தது

உயிருக்கு முன் அனைத்தும்

உப்பிலா பண்டமாய்!

உயிரைப் பிடித்து நிற்கும்

கயிறு பிடிக்க

எதைத் துறக்கவும் முயல்கிறேன்

கடைசியில் வெற்றிகொள்வது

அரைசாண் வயிறு

மற்றவை நீண்ட வரிசையில்

காத்து நிற்கும் நிதானமாய்.

வறுமை பசி போதிக்கும்

வாழ்வின் அருமையை

அழுத்தமாக வேறொருவரும்

உரைப்பதில்லை!