- இரா சத்திக்கண்ணன்
எங்கிருந்தோ
புறப்பட்ட
கதிரொளிப் பயணத்தில்
வெளிச்சமாகிறது புவி
உயிர்கள்
மகிழ்கின்றன
எங்கிருந்தோ
புறப்பட்ட
மழையின் பயணத்தில்
சில்லென்றாகிறது புவி
உயிர்கள்
அமைதியில் குளிர்கின்றன
எங்கிருந்தோ
புறப்பட்ட
காற்றின் பயணத்தில்
உயிர்க்கிறது புவி
உயிர்கள்
உயிர்களாகவே இருக்கின்றன
தொடங்கியது முதல்
பயணத்தில்
மகிழ்கின்றன யாவும்
முடிவுகளை
இலக்குகளைப் பற்றி
அவை
நினைப்பதுமில்லை கவலைப்படுவதுமில்லை
இலக்கிலில்லை!
மகிழ்ச்சி
பயணத்திலிருக்கிறது...

