நூல் அறி­மு­கம்

நூல் அறி­மு­கம்

2 mins read
1dc35403-3397-4efa-b5ae-c3419ce2d9af
-

தலைப்பு: மேகம் மேயும் வீதிகள்:

கவிதைத் தொகுப்பு

நூலா­சி­ரி­யர்: மா. அன்பழகன்

பதிப்­பா­ளர்: சிங்கப்பூர் : மாசிலாமணி

அன்பழகன், 2020.

குறி­யீட்டு எண்: Sing Tamil 894.811172 ANB

அனைத்து உரி­மை­களும் காப்­பு­ரி­மைக்கு உட்­பட்­டவை.

தலைப்பே வித்தியாசமாக இருப்ப​துபோல் இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் புதுமை. ஒரு நூல் தொகுப்பில் மரபுக் கவிதை, புதுக்கவிதை, உரைவீச்சு என பல்சுவை விருந்தாகவே இருக்கிறது.

"சங்க இலக்கிய இலக்கணச் செம்மொழி

சிங்கை அரசால் சிறப்புறும் எம்மொழி!"

என மரபுக்கவிதை ஆசிரியப்பாவில் தொடங்குவது அற்புதம்!

உழைப்பு.. ஓய்வு.. உயர்வு என்ற எண்சீர் விருத்தத்தில், "ஒடித்தாலும் நாணல்போல் வளைந்து நின்று உழைத்திடுவோம்.." என உழைப்பின் மகத்துவத்தை சொல்லும் வரிகளாகட்டும், மிகச் சிறப்பு.

மேலும் சிறப்பாக, "சொர்க்கபூமி சிங்கப்பூர்" என்ற பாவில் ஒட்டுமொத்த சிங்கையின் அருமை பெருமைகளைச் சுவைபட எழுதியுள்ளார். இன்னும் ஒருபடி மேலே "சிங்கப்பூர்ச் சிங்கம்" என்ற பாவில்,

"சிங்கை ஆற்றின் கரை ஓரத்தில்

சிங்கம் ஒன்று நிற்பதைக்

கண்டேன்

அங்கம் முழுதும் வெள்ளை நிறம்

அதுவே அரசின் கொள்கை

நிறம்.."

என்ற மெய்சிலிர்க்க வைக்கும் மகத்தான வரிகள்.

மொத்தத்தில் இந்நூலில் இல்லாத தலைப்புகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இந்தக் கவிதைத் தொகுப்பு அமைந்துள்ளது.

இந்த நூல் கிடைக்­கும் நூல­கங்­க­ளின் விவ­ரங்­க­ளைப் பெற: http://catalogue.nlb.gov.sg

- தேசிய நூலக வாரிய நூல் அறி­மு­கக் குழு