நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்

2 mins read
3a620138-83a3-4540-9710-954189227da5
-

தலைப்பு: பராரி : ஏழு கடல் ஏழு மலை

நூலா­சி­ரி­யர்: நரன்

பதிப்­பா­ளர்: சென்னை : சால்ட் , 2021.

குறி­யீட்டு எண்: Tamil NAR

அனைத்து உரி­மை­களும் காப்­பு­ரி­மைக்கு உட்பட்டவை.

இந்­தி­யா­வின் கடைசி வீட்­டில் கடை­சி­யா­கப் பிறந்­த­வன் சூர­வேல் இந்­தி­யா­வின் முதல் வீட்­டில் பிறந்த லேயா­வைச் சந்­திக்­கும் ஒரு பய­ணத்­தின் கதை இது.

"மனி­த­னுக்­கான ஆதி­சா­லை­களை முத­லில் உரு­வாக்­கித் தந்­தவை விலங்­கு­க­ளின் குளம்­ப­டி­கள்­தான்" என்று தொடங்­கும் இந்­தப் பய­ணத்­தில் சூரவேல் எப்­படி கடைசி வீட்­டுப் பையன் ஆகி­றான் என்­பது அவ­னின் அப்பா கரி­ய­னின் பய­ணத்­தி­லி­ருந்து தொடங்கு­கிறது.

தன் கையில் பருத்த திமி­லு­டன் செவலை நிறத்­தில் முந்­தைய நாள் கள­வாண்ட மாட்­டு­டன் சந்­தைக்­குள் நுழை­கி­றான். அங்கு அவன் மாட்­டிக்­கொள்ள, கொம்­பையா என்­ப­வர் கரி­ய­னைக் காப்­பாற்­று­கி­றார்.

கரி­ய­னின் கதை­யைக் கேட்ட கொம்­பை­யா­விற்கு ஒரு தந்­தை­யின் உணர்வு ஏற்­ப­டு­கிறது. கரி­ய­னின் பய­ணம் கொம்­பை­யா­வு­டன் தொடங்­கு­கிறது.

ஒரு நெடுஞ்­சா­லை­யில் கிளை பாதை­யாக இதில் கொம்­பை­யா­வின் கதை­யை­யும் சுவா­ர­சி­யம் குறை­யா­மல் கொண்டு செல்­கி­றார் எழுத்­தா­ளர் நரன். ஒரு சொல் பிழை­யால் கொம்­பையா தன் நண்­பனை இழந்த பின்பு, தன் பாதை­யும் ஒரு பள்­ளத்­தில் முடி­யும் என்று தெரிந்­தும் அதில் வீர­நடை போடு­கி­றார்.

பின் கரி­யன் நாட்­டின் வடக்கே ராஜா என்­கிற வெறும் பட்­டத்தை மட்­டும் சுமந்து கொண்­டி­ருக்­கும் ஒரு­வ­ரின் மக­ளைத் தனது கடைசி வீட்­டிற்கு அழைத்து வரு­கி­றான். கடைக்­குட்டி சூர­வேல் தன் பய­ணத்­தைத் தொடர்ந்து லேயா­வைச் சந்திப்­பது நம்மை ஒரு பய­ணத்­திற்கு ஆயத்­தப்­ப­டுத்­து­வ­து­போல் இருக்­கிறது. ஏழு கடல் ஏழு மலை தாண்­டிச் செல்­வோம் வாருங்­கள். -தேசிய நூலக வாரிய நூல் அறி­மு­கக் குழு

இந்த நூல் கிடைக்­கும் நூல­கங்­க­ளின் விவ­ரங்­க­ளைப் பெற: http://catalogue.nlb.gov.sg