தேனாய் இனிக்கட்டும்!

தேனாய் இனிக்கட்டும்!

2 mins read
2a2fc645-9221-40e5-87f0-b55072049dba
-

பூமி பிளந்து முளைத்தெழும்

விதை போல இரு மனிதா!

விருட்சமாகி நிழல் தரும்

மரமாகும் உன் கரு இனிதா!

வானை தொடும் மலையாய்

முயற்சி வேண்டும் உன்னில்!

ஆணையிட்டால் அடங்கும்

புயலும் கூட உன் முன்னில்!

புயலை எதிர்க்கும் பூ தான்

இனிய கனியை தரும் நாளை!

துயிலை குறைத்து வாழ்ந்தால்

நெடிய வாழ்வு வரும் காலை!

அலையை எதிர்த்து செல்ல…

மீனிடம் எப்படி அந்த வலிமை!

எதிர் நீச்சலோடு முயன்றால்

மலை சுமக்கும் உந்தன் எளிமை!

நச்சு காற்று நம்மை சுற்றி

பயமுறுத்தி நிக்கும்! - மனித

விஞ்ஞானத்தின் முன் அது

வீரியமிழந்து விலகி விக்கும்!

துன்பம் தந்த ஒலியும் இங்கு

ஓடி ஒளிந்து கொள்ளும்!

இன்பம் வந்த ஒளியும் மீண்டும்

நாடி உன்னை வெல்லும்!

நித்தம் இனிய நாளாய் இனி

இனிக்கட்டும் உன் வாழ்வு!

புத்தம் புதிய பூவாய் மலர்ந்து

விலக்கு மனதில் ஏற்ற தாழ்வு!

- பூவிலங்கையான்