தேசப் பற்று

தேசப் பற்று

1 mins read
f7c15630-92d6-4a08-bedc-e762ade396f4
-

ஈராயிரத்து இருபத்தி மூன்றில்

ஐம்பத்தெட்டாம், வயது!

தேசிய தினத்தின் சுதந்திரச் சுவாசத்தை

நொடிதோறும் அனுபவித்து

இன்புறுகிறேன்!

மின்னும் விளக்குகளும்

பானக நீரும்

சிங்கப் பார்வையும்

கர்வம் கொண்ட தோற்றமும்

நான் துவண்டு போகவில்லையென ஒலித்துக்

கொண்டே இருக்கும் உயர்ந்த கட்டிடங்களும்

இதுதான் தன்னம்பிக்கைமிக்க வாழ்வென்று

உணர்த்துவது போலவே இருக்கும்!

அனைவரையும் வாழவைத்த

இந்தச் சுதந்திரக் காற்றில்

சமத்துவமும் உண்டு

தொலைநோக்குப் பார்வையும் உண்டு

அந்தச் சுதந்திரக் காற்றில்

தேசப்பற்றும் உண்டு

உணர்ந்து பார்,

ரசித்திடுவாய்!

கலைவாணி இளங்கோ