மனச்சிறகுகள்

மனச்சிறகுகள்

1 mins read
106487dc-50ee-4cbe-bace-77f9670040be
படம்: - தமிழ் முரசு
Google News Preferred Icon

வாழ்வியல் ஆதாரம்   வற்றிப் போனபோதும் பொருளியல் தீர்வு தந்த   புனித ஊர்.

படித்துப் பட்டம்     பெற்றோரிங்கு பரிதவித்து வந்த போது   இரு கரம் பற்றியே  இன்னல் தணிக்கும் ஊர்.   இனிக்கும் ஊர். நாடும் நகரும்    தூய்மை மேயும். கடின உழைப்பில்    வானம் சாயும். சட்டம் கடுமை    வாய்மை செய்யும். சாதனை உலகில்    பெருமை குவியும். உழைக்கும் கரத்தில்    செல்வம் பொழியும். உழைப்பின் வழியில்    பல மொழி செழியும். கடல் கடந்து வந்தோர்க்கு   கௌரவம் செய்யும். பிறந்ததானது அகவை    ஐம்பத்தெட்டு. சிரந்தாழ்ந்து மகிழ்வோம்.   நெஞ்சம் நிமிர்த்திட்டு. சிங்கையாளை    தொழுதின்று. வானில் பறப்போம்    மனச்சிறகுகள் விரிந்து.     பூவிலங்கையான்

குறிப்புச் சொற்கள்