நதிநேசன் கணேஷ்
வேலைக்குச் செல்லும் முன் வீட்டைப் பூட்டும் அந்த அவசர விநாடிகளில்.. மின்தூக்கியில் பயணப்படும் அந்த பரபரப்பான பார்வைகளில்... காலையில் காப்பிக் கடையிலிருந்து கடந்து போகும் கணங்களில்... அலுவலகப் பேருந்தில் அமரும் அந்த அவசரத் தருணங்களில்... மதிய உணவு மலிவு என்பதால், மன்றாடிப் போய் நிற்கும் மாளாத வரிசைகளில்.. மாலையில் மக்களுடன் தே-சி கோஸோங் குடிக்கும் பொழுதுகளில், அதே முகத்தைக் கண்ட எனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை... இரவு என்னுடன், அதே ரயிலில் அதே மின் தூக்கியில் அதே மாடியில் இறங்கும் அதே சிரிக்காத முகம் என் அண்டை வீட்டுக்காரனென்று..!

