இரா சத்திக்கண்ணன்
நீ
இந்தியத்தாயின்
சுட்டும் விழிச்சுடராய்
எங்களின்
வெளிச்சமாய் இருக்கிறாய்
உன் ஒளியைக்காட்டி
சோறூட்டிய
கருணைத் தேவதைகள்
இப்போது
உன் அற்புதம்சொல்லி
அறிவூட்டிய
அழகைச் சொல்வதெப்படி!
அம்புலிமாமா
கதைசொல்லிகள்
உனை
உறவாக்கிச் சொல்வதுண்டு
இப்போது
பூமிமாமா
கதைசொல்லிகள்
உனை
அறிவொளிக்கிச்
சொல்வார்கள்
நீ
தமிழ் இலக்கியத்தில்
கவிதையாய்
அழகாய்
நிறைந்ததுண்டு
இப்போது
கவித்துவமாய்
உணர்வாய்
தமிழ் உள்ளமெங்கும்
நிறைகிறாய்
நிலாப்பெண்ணே
உனைக்
காதலுக்கு
அழைத்ததுபோதும்
இனிமேல்
வெளிச்சதேவதையாய்
வந்து
அருள்புரிவாய்!

