சந்திரயான் 3

சந்திரயான் 3

1 mins read
8dad90d8-3d2b-4c8d-938a-38b88973f166
-
Google News Preferred Icon

அனுபமா உதிவ் வெற்றியின் வேர்வை நிலவில் விழுந்தது விஞ்ஞான விதையாய் நிலவில் முளைத்தது விழுந்த இடத்திலேயே எழுந்து நின்றது விஞ்ஞான வாகனம் விஸ்வரூபம் எடுத்தது மனித குலத்தின் மாபெரும் வெற்றி மனித சக்தியின் மாபெரும் வலிமை சந்திரயான் மூன்று சாதனையின் ஊற்று நாளை நடுவோம் நிலவில் நாற்று! ‘நிலாநிலா ஓடிவா’ என்றழைத்த தாயை நிலவுக்கே அழைத்துச் செல்வோம் வாரீர்! ஆங்கோர் ஆராய்ச்சி நிலையம் அமைப்போம்! இளையோர் முதியோர் புதுயுகம் படைப்போம்! பிஞ்சு தலைமுறையின் விண்வெளி ஆராய்ச்சி எஞ்சிய கிரகங்களில் சாதனைகள் படைக்கட்டும்! விண்வெளி ஆராய்ச்சி சவாலைத் தகர்த்தெறிந்து புதிய வரலாறு சாதனைகள் படைக்கட்டும்!