அரும்பேறு

அரும்பேறு

1 mins read
4249076f-ebe7-44c1-9fed-9281ac52b8da
-

பன்னிரு மாதஞ்சென்று உன்னிரு மலரொத்த மென்னடிகள் மண்ணில் படுகையில் கல்லும்முள்ளும்  பிஞ்சு குழந்தையுன் பஞ்சு அன்னப் பாதத்தைப் பதம் பார்த்துவிடுமோவெனப் பதறும் உந்தாயின் உள்ளம்.  தடம்நோக்காது தாய்முகம் நோக்கித் தவழ்ந்து வரும் உன்னழகில் தங்கரதம் தோற்கும் தாயுள்ளம் பூக்கும்.  தடுமாறி வருமுன்னைத் தாவியள்ளி அவள் தழுவுவாள் மன்றல் நாறு மலர்சோலை மழலைத் தவழ் மனையென்பாள்.  அன்னையென நினக்கான அரும்பேற்றை ஈந்தவளே என்னாவி நீயேயென இருக்கின்றேன் கண்மணியே! அம்பிகா

குறிப்புச் சொற்கள்