உச்சித மழை

உச்சித மழை

1 mins read
6d924bb8-4f9c-4130-9222-f43c463ce536
-

பொசுக்கெனக்

கோபக் கரண்டியால்

உள்ளத்தைக் கீறிவிடும்

சுடு சொற்கள்…

இரு கண்களுள்

நுழைந்து

உடையும்

உப்புக் கடல்…

பின்,

அன்பென

அணைக்கும்

ஆறுதல் வார்த்தைகளில்

ஆவியாகி

மேகமாகி

‘சோ’ வெனக் கொட்டும்

உச்சிதமான உறவின் மழை… !

நெப்போலியன்