கிளை

கிளை

1 mins read
90407138-3024-4cb8-918f-d3a00a98a6dd
-

களைத்த இரவில்

ஒற்றை நட்சத்திரம்

தரையிறங்கித் தொடுகிற

தூக்கத்தின் வாசலில்

வெட்டிச் சாய்த்த சாலை

மரங்களின் வாசம்

பறவையின் கூடும்

துளிர்த்த வடுக்களும்

தூக்கத்தை கெடுத்தது

நாளை நகரத்தைச் செதுக்க

கூரிய பற்களின் ரம்பம்

சுழன்று உதித்தது சூரியன்

ஊரில் நட்ட விதை முளைக்க

ஷா நவாஸ்

குறிப்புச் சொற்கள்