விடியட்டும்...

விடியட்டும்...

2 mins read
ae217224-3bb3-4804-8a8c-dd20e04ad9bc
-

தொடர்ந்து வந்த துண்பங்கள்

தொலைந்திங்கே போகட்டும்.

தொலைக்காத இன்பங்கள்

தொடர்ந்திங்கே கூடட்டும்.

தொழு நோயாய் தொடரும்

வறுமை இங்கே ஒழியட்டும்.

வளமையை வாரியணைத்து

நம் மனமிங்கே குளிரட்டும்.

இன்னலை துரத்தி இனிய

பொன்னாள் இன்று பிறக்கட்டும்.

இல்லாதோரும் இருப்பவராய்

இருந்திங்கே சிறக்கட்டும்.

பொல்லாங்கு செய்வோனை

புழுதி மண் மீது எரிக்கட்டும்.

கொல்லாத மனமுள்ளோனை

தூய விண் மீது விதைக்கட்டும்.

விரக்தியே இல்லாமல் வீரம்

நம்மில் இங்கே முளைக்கட்டும்.

வறுமையது தொடராமல் வாடி

காலமெல்லாம் இளைக்கட்டும்.

உயர்ந்தவன் தாழ்ந்தவன்

வேறுபாடிங்கே உடையட்டும்.

கருப்போ சிவப்போ உள்ளம்

வெள்ளையாக இருக்கட்டும்.

சிங்கத்தின் குகையில் மான்கள்

துள்ளிக் குதித்து விளையாடட்டும்.

சிறுத்தையின் மடியில் செல்லப்

பூனையது துயில் கொள்ளட்டும்.

புத்தாண்டை வரவேற்று

மொத்தாண்டும் மிளிரட்டும்

முத்தாண்டும் பிறந்திங்கே

“கொரோனா”

செத்தாண்டாய் விடியட்டும்.

பூவிலங்கையான்

குறிப்புச் சொற்கள்