சரித்திரமாய்...

சரித்திரமாய்...

1 mins read
c3932273-8a50-48f8-9191-aa24fe1744c6

எழுதியவனின்

ஆதங்கமும் ஆதரவும்

ஏற்றமும் இறக்கமும்

தாங்கிய ஏடுகள்

அன்பால் பெற்ற

அடையாளங்களும்

அவமானத்தால் அடைந்த

அசிங்கங்களையும்கொண்டது

துவண்டபோது உள்ளத்தில்

உள்ளதைக் கொட்டுகையில்

தோளைத் தட்டிக் கொடுத்து

துணிவூட்டும் தோழன்

அவன் வாழும் வரை

அது ரகசியப் பெட்டகம்

வாழ்வின் முடிவுக்குப் பின்

சான்றுகளோடு சரித்திரமாய்

அம்பலத்துக்கு வரும்

ஹபிபா

குறிப்புச் சொற்கள்