மாதங்கள்
பன்னிரண்டாம்
அவற்றில்
சிறந்ததாம்
ரமலான்
திருக்குர்ஆன்
பூமிக்கு
இறங்கிய
தொடர்புடைய செய்திகள்
மாதமாம்
ரமலான்
புசித்திருந்த
நாட்களை
மறந்து
பசித்திருந்து
நோன்பிருக்கும்
மாதமாம்
ரமலான்
உறங்கிய
இரவுகளை
மறந்து
விழித்திருந்து
தியானம்
செய்யும்
மாதமாம்
ரமலான்
ஐம்புலன்களை
அடக்கி
தியாகத்திற்குச்
சிறப்பு
சேர்க்கும்
மாதமாம்
ரமலான்
பாவங்கள்
அனைத்தையும்
போக்கிடும்
மாதமாம்
ரமலான்
அன்று
பிறந்த
மாசற்ற
சிசுவை
போல
மறுபிறவி
எடுக்கச்
செய்யும்
மாதமாம்
ரமலான்
இறைவனை
நேரடியாக
நேசிக்கச்
செய்யும்
மாதமாம்
ரமலான்
ஏந்திடுவோம்
என்றும்
இறைவனிடம்
இரு கரம்
கேட்டிடுவோம்
அவனருளை
இப்புனித
ரமலானில்
எழுத்து
ஹபிபா ஷரீஃப்

