முதல் குரல்

1 mins read
9dac277c-250c-43d1-9b05-3b61b2cea409
-

தென்னவன் நிலத்து நெல்லே

பண்ணவன் உளத்து சொல்லே

கறையாத ஆன்றோர் கல்லே

வளையாத வணிகன் முள்ளே

அமிழ்தென்றார் சுவைத்தோ மில்லை

அழகென்றார் திளைத்தோ மில்லை

ஆய்யென்றார் ஆய்ந்தோ மில்லை

தாய்யென்றார் தொழுதோ மில்லை

உயர்திணையின் முதல் குரலே

துறந்தாலும் எம்முள் துய்ப்பவளே

உனைத்தொழாது எப்படி உய்ப்பேன்

இனி இப்பூ உலகிலே

பொன் கர்ணன்

குறிப்புச் சொற்கள்
கவிதைதாய்ஞாயிறு முரசு