கி. சுப்பிரமணியம்
வண்ணப் பறவையாம் பச்சை கிளிகளை
கண்டால் மனதை கவரும் - மண்ணில்
கருப்பின காகத்தை கூண்டில் அடைத்தே
பொறுப்பாய் வளர்ப்பரோ பார்
தெருவினில் நாய்கள் திரியும் பசியால்
தருவதற்கு யாருக்கும் தோன்றா - உருவத்தில்
மெருகான நாய்களை மெல்ல தழுவி
பெருமிதம் கொள்வோர் பலர்
சாதிகள் போற்றும் சுயநல போக்கினை
நாதியற்ற நாயிடமும் நோக்கிடும் - போதிய
சிந்தனை இல்லா சிறுமதி மானிடரால்
நொந்தன சிற்றுயிர்கள் நாளும்!

