தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அழகின் வயது அறுபது

1 mins read
4e13494f-ffc2-44f9-afbd-337757a7b378
-

துண்டாய்க் கிழித்து தூக்கி வீசப்பட்ட

மேகம்

பல நாட்டுப் பறவைகள் நீரருந்த

நிரப்பி வைத்த

நீர்த்தேக்கம் ...!

அலட்சியமாய்த்

தூக்கிவீசப்பட்ட துண்டு நிலம்!

எந்தக் கண்ணியிலும் விரிசல் இல்லாத

சங்கிலித் தொடராய் சகோதரத்துவம் தழைத்து

நிற்க....

கம்பங்களை எல்லாம்

அடுக்குமாடியில் அமர்த்தி

எல்லைகளை

விரிவு செய்த நேர்த்தி....

அவனியில்

அமைதியின்

சிங்கபுரமாய் ...!

கழுதை கூட

இளமையில் அழகு!

கானமயில்

முதிர்வில் அழகு!

வானில் நிலவின்

வயது முப்பதில் அழகு!

இளமைக்கு

இருக்கலாம் வயதின் அளவுகோல்...

அழகிற் கில்லை வயது ....!

தங்கச்சிமடம் மகேஷ்குமார்

குறிப்புச் சொற்கள்
கழுதைகவிதைகதைஞாயிறு முரசு