ஏஐ

ஏஐ

1 mins read
1c5caaef-3915-411b-9c85-ca42094c68e4
-
Google News Preferred Icon

தொடும்உணர்வுத் திறன்கொண்ட தாவரங்கள் ஓரறிவு

தொடுவதோடு சுவையுணரும் நத்தைகளோ ஈரறிவு

ஈரறிவொடு முகரும்திறன் எறும்புகளோ மூவறிவு

மூவறிவொடு பார்க்கின்ற நண்டுதும்பி நாலறிவு

நாலறிவொடு கேட்கும்திறன் விலங்குபறவை ஐந்தறிவு

ஐந்தறிவொடு சிந்தனைத்திறன் மனிதனோ ஆறறிவு

ஆறறிவு மனிதனின் அஞ்ஞானம் விஞ்ஞானம்

இல்லாதது அனைத்திலும் இருக்கின்ற பெரும்ஞானம்

இருப்பதில் அனுபவமாய்ப் பெறும்ஞானம் மெய்ஞ்ஞானம்

இல்லாமல் அதிசயங்கள் புரிகின்ற புதுஞானம்

கேள்விக்கெலாம் பதிலாகும் பேரண்ட வெளிஞானம்

விரல்நுனியில் உலகத் தகவல்களைத் தருஞானம்

உருவின்றி உதவிடுமே உணர்வின்றி நேசிக்குமே

உறவின்றி உறவாகும் பகையில்லா நண்பனாய்க்

கையின்றி உதவிடுமே வாயின்றிப் பேசிடுமே

கருவின்றி உருவானநீ இறைவனா? மனிதனா?

அனுபமா உதிவ்

குறிப்புச் சொற்கள்