ஒரு பாடல் புனைய
உருகி உருகி உறைகிறான்
கவிஞன்
காட்சி அமைக்க
கல்லைப் பிழிகிறான்
இயக்குநன்
ஒளி, ஒலிப்பதிவாளன்
சிற்றுளிகளாகி
சுத்தியடிபடுகிறான்
இதயத்துடிப்பை
இடியாக்குகிறான்
இசைஞன்
ஆலைக்கரும்பு நடிகன்
நசுங்கிநசுங்கி
உயிர்க்கிறான்
படம் உருவாகிறது
பாடாவதி என்கிறான்
ரசிகன்
அமீதாம்மாள்

