தலைப்பு: கபர்
நூலாசிரியர்: கே.ஆர். மீரா
பதிப்பாளர்: பொள்ளாச்சி : எதிர் வெளியீடு, 2022.
குறியீட்டு எண்: MEE
அனைத்து உரிமைகளும் காப்புரிமைக்கு உட்பட்டவை.
வசதியான இஸ்லாமிய இளைஞன் தனது மூதாதையர் ஒருவரின் கல்லறை இருக்கும் காணியின் உரிமையை மீட்டெடுக்க வழக்குத் தொடுக்கிறான். நீதிபதி பாவனா என்ற பெண்ணின் பார்வையில் கதை நகர்கிறது. நிஜமும் மாய யதார்த்தமும் மாறி மாறிப் புதிய முடிச்சுகளை அவிழ்த்து வாசகனை இழுத்துச் செல்லும் படைப்பு.
கணவனைப் பிரிந்து தனித்து வாழும் பாவனா மகனைப் பொறுப்பாகப் பார்த்துக் கொள்வதுடன் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு சொல்லும் தொழிலையும் செய்துகொண்டிருக்கிறாள். எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் துணிச்சலான பெண். மாயம் செய்து மனதைப் படிக்கும் இளைஞனை நெருங்குகிறாள். அவன் மூலம் தன்னைப்பற்றிய புரிதல் ஏற்படுகிறது. அவள் இரண்டு வாழ்க்கை வாழ்கிறாள். அந்த உண்மையை உணரும்போது கதை இன்னொரு தளத்தில் நகரத் தொடங்குகிறது.
ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இன்னொருவரை வெளிப்படுத்தும் வேலையை குறியீடுகள்மூலம் சொல்ல முற்படுகிறது இந்த நாவல். பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொன்மைக் கதாபாத்திரமான ஜெகதீஸ் மாமாவும் அவருடன் வந்த இரண்டு பெண் தேவதைகளும் உண்மையையும் மாய உலகத்தையும் கலந்து காட்டுவது கதை சொல்லலில் புதிய பரிணாமம்.
எல்லாக் கலைகளும் இலக்கியங்களும் மனிதர்களுக்கு இடையிலான உணர்ச்சிபூர்வமான கொடுக்கல் வாங்கல். அதைக் கற்றுக் கொள்வது மனப்பூர்வமான விருப்பத்தால் விளைவதல்ல, தன்னை மறந்த உத்வேகம் தான் என்று வழிகாட்டிடவும் விழைகிறது. பக்க அளவில் சிறிய படைப்பானாலும் காத்திரமான கதையும் உத்தியும் வாசகருக்குப் புதிய அனுபவத்தைத் தரும்
தேசிய நூலக வாரியத்துக்காக, சரவணபவன் ஆதவன்
நூல் கிடைக்கும் நூலகங்களின் விவரங்களைப் பெற: http://catalogue.nlb.gov.sg

