யாரோடும் பகையில்லை
ஓடோடே அடங்கிக்கிடக்கும் -
ஆன்மாவிற்கு
ஊரோடு ஒழுகும் அன்பு
நீரோடு போகும் - இலைக்கு
போராட்டமில்லை பேரானந்தமே
காரோடு கொட்டும் மழைக்கு
சேரோடு சேரும் மகிழ்ச்சி
தொடர்புடைய செய்திகள்
தருவிற்கு பழம் தேவையில்லை
விறகுகளாகும் - கிளைகளும் தேவையில்லை
வேரோடுதான் உறவு
உறவென்று ஒன்றுமில்லை
பிறவிக்கு முளைக்கும் புல் போலத்தான்
தானே முளைக்கும் தானே அழியும்
புட்களுக்கு,
சிங்கமும் புலியும் நல்லவை
மாடும், ஆடும் ,மான்களும் தான் - பகை
புல்லொன்றின் பார்வையில்
ரிஷி சேது

