தையும் அறமும்

1 mins read
30acc646-8c52-4fba-af4a-ec25f0467400
-

கிளறிய நிலமே

விளைச்சல் தரும்

உடைபடும் கல்லே

கோயில் செய்யும்

எரியும் விறகே

ஒளிதரும்

அடிபடும் இரும்பே

ஆயுதம் செய்யும்

கழிவைத் தின்றே

கரும்பு இனிக்கும்

கைக்கெட்டும் தொலைவில்

வைரங்களில்லை

பொங்கலின் தத்துவம்

வைரம்

தண்ணீராய்

உறை, உருகு, ஓடு, பற

ஒரு பசுவாக

வாழ்ந்துபார்

புரியும் பொங்கல்

தாயும்

தாய்ப்பாலுமாய்

தையும் அறமும்

அமீதாம்மாள்

குறிப்புச் சொற்கள்
கதைகவிதைஅமிதாம்மாள்ஞாயிறு முரசு