நூல் அறிமுகம்

1 mins read
691e129a-0770-41db-ae2d-8d0318a66909
ஏமாறாதிருக்க சில எச்சரிக்கைகள் - டாக்டர் எஸ். ஜீவராஜன் - படம்: தேசிய நூலக வாரியம், சிங்கப்பூர்

தலைப்பு: ஏமாறாதிருக்க சில எச்சரிக்கைகள் நூலாசிரியர்: டாக்டர் எஸ். ஜீவராஜன் பதிப்பாளர்: சென்னை : மணிமேகலைப் பிரசுரம், 2015. குறியீட்டு எண்: 158.1 JEE அனைத்து உரிமைகளும் காப்புரிமைக்கு உட்பட்டவை.

144 பயனுள்ள தலைப்புகளில் கட்டுரைகளாக வெளிவந்துள்ள இந்த நூலில், எழுத்தாளர் தன் சொந்த வாழ்க்கையில் நடந்தவற்றையும் அவர் பார்த்தவற்றையும் பகிர்ந்துள்ளார்.

குடும்பம், நண்பர்கள், உறவினர்கள், காதலர்கள், வியாபாரிகள் என்று பலதரப்பட்ட நிகழ்வுகளை எழுத்தாளர் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் மிகவும் ஆச்சரியப்பட வைக்கிறது. ஒவ்வொரு கதையும் நம்மை சிந்திக்கவும் ஒருசில கதைகள் சிரிக்கவும் வைக்கின்றன.

சின்ன சின்ன அறிவுரைகள், சின்ன சின்ன சந்தோஷங்கள், சின்ன சின்ன தரவுகள் என்று தன் வாழ்க்கையில் நடந்த, அனுபவித்த அனைத்தையும் ஒரு நூல் வடிவில் ஆசிரியர் வழங்கியிருக்கிறார்.

நிறைகளும் குறைகளும் எப்போதும் எங்கும் நிறைந்திருக்கின்றன. அதைக் குறிப்பெடுத்து ஒரு நூலாக மற்றவரும் பயன்படும் வகையில் கொடுக்க எழுத்தாளர் முயன்றிருக்கிறார். அனைத்து அனுபவங்களும் வாசகர்களுக்குத் தாங்கள் ஏதோ ஒரு காலக்கட்டத்தில் கடந்து வந்த பாதையை நினைவுபடுத்தி, அதிலிருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்குகின்றன.

- தேசிய நூலக வாரியத்துக்காக, இராமசாமி குமரேசன்

நூல் கிடைக்கும் நூலகங்களின் விவரங்களைப் பெற: http://catalogue.nlb.gov.sg

குறிப்புச் சொற்கள்