நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்

2 mins read
92d9b43e-b437-4d40-ab43-89c655534229
கலர் பென்சில்: சிறுகதைத் தொகுப்பு - நூலாசிரியர்: மலையரசி சீனிவாசன்

தலைப்பு: கலர் பென்சில்: சிறுகதைத் தொகுப்பு

நூலாசிரியர்: மலையரசி சீனிவாசன்

பதிப்பாளர்: சென்னை : ஆம்பல் பதிப்பகம், 2023.

குறியீட்டு எண்: Sing MAL

அனைத்து உரிமைகளும் காப்புரிமைக்கு உட்பட்டவை.

உள்ளத்து உணர்வுகளை ஓவியமாக்கும் குறுங்கதைகளின் தொகுப்பு.

நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளின் அற்புதங்களையும் அபத்தங்களையும் பென்சில் முனைபோல் கூர்மையாக நறுக்குத்தெறித்தாற்போலப் பதிவுசெய்யும் கச்சிதமான கதைகள் வாழ்க்கை பற்றிய எளிய கேள்விகளை நம்மிடம் விட்டுச் செல்கின்றன.

பெற்றோர் இருவரும் பணிக்குச் செல்லும் சிங்கப்பூர்ச் சூழலில் ஏங்கித் தவிங்கும் பிள்ளைகளின் நிலையைச் சொல்லும் ‘கிலுகிலுப்பை’ நம்மை வலியுடன் சிந்திக்கச் செய்கிறது.

தன் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த பார்த்திபன், முதுமையில் அவர் மறதிநோய்க்கு ஆளான நிலையில், அவருக்கு வண்ணம் தீட்ட உதவும் ‘கலர் பென்சில்’ கதை நம் இதயத்திலும் கலர் பென்சில்களால் கோலமிடுகிறது.

கிடைத்த பத்து வெள்ளியில் பாசமிகு தங்கைக்குச் சதுரங்கப் பலகை வாங்கிவரும் ‘அண்ணன் இருக்கேன்’ கதை குழந்தைகள் உணர்வை அழகாகக் காட்சிப்படுத்துகிறது.

வலைப்பூ தொடங்கி சமையல் குறிப்புகளை அரங்கேற்றும் ‘அப்பத்தா’, தன் ஆசை மனைவியின் கல்யாணச் சேலையை அவள் இறந்த பின்னும் பாதுகாத்து வைக்கும் ‘கல்யாணச் சேலை’, நாய் பழக்கும் வேலைக்குச் சென்று தோழிக்கு உதவும் ‘நடைபழகு’ என்று வாழ்க்கையின் சுவைகளை இக்கதைகள் பந்தி வைக்கின்றன.

குறைந்த நேரத்தில் வாசிக்கக்கூடிய வகையில் எழுதப்பட்டிருக்கும் இக்கதைகள் மாணவர்களுக்கு நிச்சயம் ஈர்ப்பைத் தரும்.

தேசிய நூலக வாரியத்துக்காக: இசக்கிசெல்வி

நூல் கிடைக்கும் நூலகங்களின் விவரங்களைப் பெற: http://catalogue.nlb.gov.sg

குறிப்புச் சொற்கள்