தலைப்பு: வணிக நூலகம் நூலாசிரியர்: டாக்டர் ஆர். கார்த்திகேயன் பதிப்பாளர்: நாகர்கோவில் : காலச்சுவடு பதிப்பகம், 2019 குறியீட்டு எண்: VAN அனைத்து உரிமைகளும் காப்புரிமைக்கு உட்பட்டவை.
வணிகம் பற்றிய ஆங்கில நூல்களின் சுருக்கங்களை மொத்தம் 41 கட்டுரைகளாக வாசகர்களுக்குப் பயனளிக்கும் வகையில் நூலாசிரியர் எளிய நடையில் அறிமுகம் செய்துள்ளார்.
‘தி இந்து’ நாளிதழில் தொடராக வெளிவந்த இக்கட்டுரைகள் நிரூபிக்கப்பட்ட வணிக வெற்றியை வழங்கும் நூல்களிலிருந்து எடுக்கப்பட்டவை.
‘விருந்தோம்பல் தரும் வியாபார வெற்றி’ என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரையில் ரான் காஃப்மேனின் அதிகம் விற்கப்பட்ட நூலான ‘அப் யுவர் சர்வீஸ்’ எனும் நூலிலிருந்து சேவைத் தரத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் கருத்துகள் பகிரப்பட்டுள்ளன.
கால் டாக்சி அனுபவத்தை வைத்து அது வழங்கக்கூடிய வெவ்வேறு வாடிக்கையாளர் சேவைகளை எழுத்தாளர் தெளிவாக விளக்கியுள்ளார்.
மேலும், சேவைத் தரத்தைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே இருப்பதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறார். சிங்கப்பூரின் வெற்றிக்கு அதன் சேவைத் தரமே காரணம் என்றும் கூறுகிறார்.
இப்படி ஒவ்வொரு கட்டுரையும் ஆசிரியரின் தனித்துவமான பார்வையும் நமக்கு ஒரு சிறப்பான பார்வையையும் உந்துதலையும் கொடுக்கிறது.
நூலாசிரியர் தமது சொந்த அனுபவங்களையும் சேர்த்து எழுதியிருப்பது இத்தொகுப்பின் சுவாரசியத்தை மேலும் கூட்டுகிறது.
தேசிய நூலக வாரியத்துக்காக: ஷோபா குமரேசன் நூல் கிடைக்கும் நூலகங்களின் விவரங்களைப் பெற: http://catalogue.nlb.gov.sg

