அவள் ஒரு நதி

அவள் ஒரு நதி

1 mins read
efc778e5-f2f7-45e9-9467-34508fb0249a
-

அவளைப்

பார்க்கப் பார்க்க

பரிதாபமே வருகிறது

இப்போது!

ஒரு காலத்தில்

எத்தனை வனப்போடும்

வசீகரத்தோடும்

கண்போரையெல்லாம்

கவர்ந்தவள்

சல சல எனப்

பேசியபடி சுதி கூட்டி

அவள் நடந்துவரும்

பேரழகைப் பாடிப் பாடி

ஓய்ந்தது ஒரு கவிதைத்

தலைமுறை

அவளுக்கும் என் தோழிக்கும்

அழகியலாய் ஒரே பேர்...

ஒரு காலத்தில்

வளைகாப்பிட்ட

நிறை மாத கர்ப்பிணியாய்

வளைய வந்தவள்….

இன்று பால்மடி

மரத்த பசுவாய்

நலிந்து போனாளே

காவிரி நதி!

நூர்ஜஹான் சுலைமான்

குறிப்புச் சொற்கள்
நூர்ஜஹான் சுலைமான்கதைகவிதைஞாயிறு முரசு