தமிழ்த் தேனீக்கு மலரஞ்சலி!

தமிழ்த் தேனீக்கு மலரஞ்சலி!

1 mins read
9cfb7d3c-1a8b-4904-98a1-18ac6a7f3777
-

தமிழ்மணம் வீசிய தமிழ்த்தேனீ மறைந்தது

பைந்தமிழின் சோலையிலே தேனெடுத்த தேனீயே

பண்பாளர் அன்பழகன் மறைந்த செய்தி கேட்டோமே!

சொல்லாமல் நீயுறங்கச் சென்றதென்ன நியாயமோ?

ஆயிரம் இதழ்கொண்ட செந்தாமரை உன் திருமுகம்

அறிவென்ற சுடர்விளக்கை ஏற்றிவைத்த பொற்கரங்கள்!

கூவென்ற குயிலோசை உன்வார்த்தை ஒவ்வொன்றும்

கூறாமல் பிரிந்தாயே குமுறுகின்றோம் இவ்விதம்.

அனைத்து வழிகளிலும் தமிழுக்குத் தொண்டுசெய்து

அனைவரின் நெஞ்சினிலே பாவினத்தை விதைத்தாயே!

கண் துஞ்சாமல் தமிழ்காண காலமெல்லாம் உழைத்தாயே

கண்மூடி நீயிருக்க காலம்தான் சம்மதிக்குமோ?

தமிழுலகமே கலங்குதய்யா தமிழுனது பெயரல்லவோ?

தவிக்கின்றோம் உன்நிழலில் நின்றிருந்த பிள்ளையாய்!

தமிழ்த்தேனீ உன்புகழ் தரணிதனில் வாழுமே

தலைசாய்த்து நிற்கின்றோம் கண்ணீர் மல்கவே!

டி.என்.இமாஜான்

குறிப்புச் சொற்கள்