அறமொழியான அன்பழகன்!

அறமொழியான அன்பழகன்!

fallback

26 Apr 2026 - 6:30 am

1 mins read

நமக்குத் தெரிந்தவர்

நம்மோடு இருப்பவர்

நம்மை நேசிப்பவர்

நமக்காக நின்றவர்

நமக்கென வந்தவர்

நம்மோடு இருந்தவர்

அன்பில் அழகன்

அருந்தமிழ்க் கலைஞன்

ஆயக்காரன்புலன்

நேயமான குணன்

நேசக்கூட்டின் மகன்

மாசிலா அன்பழகன் !

எடுத்த காரியம் முடித்தல்

எதிலும் தன்னைக் கொடுத்தல்

புதியோரை மெச்சி உயர்த்தல்

மதியாதார் வாசலும் மிதித்தல்

புன்னகையால் அனைத்தையும் ஜெயித்தல்

புதுமைத் தேனீயாய் தமிழுக்கு உழைத்தல்

கவிமாலை காத்த உயரன்

சலிக்காமல் நூல் பல யாத்த சிகரன்

வியாபார ஒழுங்கில் நேர்த்தி வணிகன்

எல்லார்க்கும் ஈந்த கொடைஞன்

எந்நாளும் உற்சாக இதயன்

எண்பதிலும் இருபதென இளைஞன்

அன்பெனும் ஆலமரம் சாய்ந்ததே

காலம் எங்கள் கற்பூரத்தைக் கரைத்ததே

அன்பழகன் எனும் பறவைப் பிரிந்ததே

திரும்பாத திசை நோக்கிப் பறந்ததே

வருவதும் போவதும்…

வாழ்க்கையின் பொதுவிதி !

அன்பழகன் போல்,

வாழ்வதும் மறைவதும்

எல்லோர்க்கும் அறமொழி !

நெப்போலியன்

குறிப்புச் சொற்கள்