விடுமுறை இல்லாமல்
ஆறு மாதங்கள்…
அடுப்பில் வெந்து கொண்டே
வெந்திடாத கனவுகளோடு…
குடும்பத்திற்காக...
“தொழிலாளர் தினம் வருதே…
எப்படியும் முதலாளி
ஒரு நாள் விடுமுறை கொடுப்பார்…”
என்ற நம்பிக்கையில்
பிரியாணிக்கு தம் போட்டு
மனசில் சின்ன சிரிப்போடு
காத்திருந்தேன்…
சடுதியில் கேட்டது!..
அலுமினியத்தை காய்ச்சி ஊற்றியது போல்
முதலாளியின் குரல்..
“குமாரு … நாளைக்கு மே தினம்…
கடைக்குக் கூட்டம் ரொம்ப வரும்…
இன்னைக்கு ரொம்ப நேரம் வேலை பார்க்கணும் பா…”
அந்த நொடியில்...
என் மனசுக்குள் மட்டும்
சத்தமில்லா ஒரு குரல் …
மே டே… மே டே… மே டே...
என்று நேற்றைய தொழிலாளர் தினத்தில்...
அய்யா புவன்

