தொழிலாளி எனும் சாமி !

தொழிலாளி எனும் சாமி !

1 mins read
ff36fcc3-1c51-4af5-9025-127f8114342c
-

உலகம் விழிக்க

உழைத்துச் சிவந்தோம்

சிவந்த கைகளில்

சிகரம் பிடித்தோம்

பிடித்தோ படித்தோ

பகுத்தறியப் பழகினோம்

பழகிய வித்தைகளைப்

பாரமின்றிச் சுமந்தோம்

சுமந்தே சுருங்கிய

சோம்பலைத் துடைத்தோம்

துடைத்த வியர்வைகளைத்

தூண்களாய்ச் சமைத்தோம்

சமைத்தவை சாதனையாக

சந்தோஷம் வாங்கினோம்

வாங்கியவை வற்றாதபடி

வாழ்க்கையை வடிவாக்கினோம்

வடிவங்கள் வரவுகளாக

வறுமைகள் ஒழித்தோம்

ஒழித்தவை ஒளிந்தவை

ஒன்றா... இரண்டா...

உலகத்தில் உழைப்பால்

உயர்ந்தவை ஓங்கியவை

ஒன்றா... இரண்டா...

அளவில்லை எடையில்லை

வார்த்தைகளில் வரியில்லை

தொழிலாளி கரந்தன்னைக்

கும்பிட்டே நான் தொழுதேன்...

எதிர்கால சமுதாயம்

இனிதாக எந்நாளும்...

- நெப்போலியன்

குறிப்புச் சொற்கள்