ஒரு முயல் வாசித்த வயலின்

ஒரு முயல் வாசித்த வயலின்

fallback-0

21 Jun 2026 - 6:01 am

1 mins read

ஓர் இசைக்கலைஞரின்

செருக்குடன்

தனது வயலினை

மெல்ல இசைக்கிறது

முயல் ஒன்று

அதை வேட்டையாட

அலையும் மிருகங்கள் கூட

வியப்பில் நின்று

கவனித்தன

தன்னையே மறந்து

தனது வயலினை

இசைத்துக்கொண்டிருந்த

வினோத முயலை

அனைவரும்

கேள்விகேட்காமல்

ரசித்தனர்

சில அதிசயங்கள்

இவ்வாறாகத் தோன்றுவதுண்டு

ரெமிலா

குறிப்புச் சொற்கள்
கவிதைகதை/கவிதைஅமிதாம்மாள்யூசுப் ராவுத்தர் ரஜித்