இலக்குக் கம்பங்களை
ஏராளமாய் வைத்தால் என்ன?
குறுகிய எல்லைக்குள் பந்து
எத்தனை தடவைகள்
இலக்கு நோக்கி உதைபடுவது?
பெட்டிக்குள்ளேயே எத்தனைகாலம்
புதியன தேடுவது?
பிரமிடுப் பொன்னும் பொருளுமாய்ப்
புதைந்து கிடக்கலாமா அறிவு
இனம் மதம் மொழியென எல்லைக்கோடுகள்
இன்னும் அவசியந்தானா?
செயற்கை நுண்ணறிவு
செயற்கரிய செய்கின்றது
இயற்கை அறிவுக்கு எல்லை எதற்கு?
அறிவை அறிவு அறியாதிருந்தபோது
அறிவாளிகளின் அடக்குமுறை
அவசியமாய்இருந்தது!
விரிவு செய்த அறிவு
அகண்டமாகியிருக்கிறது
கண்டங்கள் எதற்கு?
ஆறு கண்டங்களையும்
ஒருகண்டமாக்குக!
லக்சம்பர்க் காசு மேட்டை
தெற்குச் சூடான் பள்ளத்தில்
கொட்டி நிரவட்டும்!
செம்மொழிகள் கலந்து ஒரு
நன்மொழி உண்டாகட்டும்!
நல்லவர்கள் ஒன்றுசேர்ந்து
நாடாளட்டும்;
இல்லை இல்லை
கண்டமாளட்டும்!
காசாங்காடு அமிர்தலிங்கம்

