வாழும் வானவில்

வாழும் வானவில்

1 mins read
e4c5f2fa-40a4-4703-8e5a-c28c98906044
Google News Preferred Icon

வாழும் வானவில் நீ,

அறிவியலாளரையும் வியக்கவைக்கும் விடுகதை.

எத்திசையிலும் பறக்கும் வல்லமை,

நான்கு இறக்கைகள் சுமக்கும்

சிறு வானூர்தி.

உன் குறியில் தப்புவது அரிது;

உன் கண்கள்—

விழியாடிகள் அல்ல, பேரற்புதம்.

உழவர்க்கு விலைமதிப்பற்ற தோழன்,

குழந்தையின் முடிவில்லா சிரிப்பு நீ.

எல்லை தாண்டிப் பறந்தாலும்

அடக்கம் உன்னுள் உறையும்;

பின்புறத்தையும் பார்க்கும் வல்லமை கொண்ட

பொறுமையின் உருவம்.

எத்தனை அழகு!

எத்தனை அமைதி!

அரிமாவின் மேல் அமர்ந்தும்

அது அறியாது இருக்கும் போது,

தான் அரசன் என்று பெருமை பேசும் சிலரை விட,

நீதான் உண்மையான அரசன்!

பாலா ரமேஷ்

குறிப்புச் சொற்கள்
ஞாயிறு முரசுகதைகவிதைவானூர்தி