தலைப்பு: ஆலம் நூலாசிரியர்: ஜெயமோகன் பதிப்பாளர்: Coimbatore : விஷ்ணுபுரம் பதிப்பகம், 2023. குறியீட்டு எண்: JEY அனைத்து உரிமைகளும் காப்புரிமைக்கு உட்பட்டவை.
காலம் காலமாக மனித மனம் என்பது வஞ்சத்தையும் பழி தீர்த்தலையும் மனத்தின் ஆழத்தில் அடக்கிக்கொண்டு உலா வருகிறது. பழிதீர்க்க ஆழ்மனது கூறும்போது வலியவன் செய்வான். இயலாதவன் வலிமை உடையவனைத் தூண்டிவிடுவான். எழுத்தாளர் ஜெயமோகனின் ஆலம் எனும் இந்நாவலில், இரண்டு செல்வாக்கு மிக்க குடும்பங்களுக்கு இடையில் மூண்ட பகை தலைமுறைகளைக் கடந்து, வேர்விட்டுக் கிளைகளை விரித்து வளர்கிறது.
பங்காளிகளான இரண்டு குடும்பங்களையும் சேர்ந்தவர்கள் ஒரே பெண்ணை மணமுடிக்க ஆசைப்படுவதில், தற்செயலாக விழும் ஒரு கொலை அவர்களிடையே கனன்று கொண்டிருந்த பகையை இன்னும் உச்சத்திற்குக் கொண்டுபோகிறது. அந்தக் கொலைக்குப் பிறகு, மாறிமாறி இரண்டு குடும்பங்களிலும் ஒருவரையொருவர் பழிவாங்குவதற்காகச் செய்யப்படும் கொலைகள் ஒரு முடிவுக்கு வரும்போது இவர்களிடையே மூன்றாமவர் ஒருவர் இருப்பது புலனாகிறது.
தவமிருந்து பெற்ற ஒரே மகனைக் கூட முத்தமிடப் பயப்படும் எளிமையான, மிக வெகுளியான சந்தானம் எனும் மனிதனை, இத்தனை கொலைகள் செய்யத் தூண்டிய காரணி என்னவென்று தெரியும் கணத்தில் கதையின் முடிச்சு அவிழ்கிறது. ஆலம், மனிதனின் மனத்தில் காலம் காலமாக ஒளிந்து கிடக்கின்ற பழிதீர்க்கும் எண்ணத்தின் தீநாக்கு. தேசிய நூலக வாரியத்துக்காக, ஹம்சாரிணி தவகணேஸ் நூல் கிடைக்கும் நூலகங்களின் விவரங்களைப் பெற: http://catalogue.nlb.gov.sg

