வைத்தியம்

வைத்தியம்

1 mins read
fdd7d58a-bf90-4b2e-ad7d-4c1af28a8dd1
-

கனவு காணும்

பூக்களின் மேல்

கல்லெறிந்து

விடாதீர்கள்.

இங்கே

களவு போவது

பூக்கள் அல்ல

உங்கள்

புன்னகைகள்.

பூக்களை

நேசியுங்கள்

தேன் சொரியும்

புன்னகையை

வாசியுங்கள்.

பூக்களின் இதழ்கள்

ஓர் நாள் காயலாம்

உங்கள் இதழ்களை

எப்போதும்

ஈரமாகவே

வைத்திருங்கள்.

பூக்களைப் பறித்த

விரல்களை

வெட்டி எறிய

துடிக்கிறது...

வன்முறைக்கு

அப்பாற்பட்ட

வண்ணத்துப்பூச்சி.

மறித்த பின்னும்

சிரித்துக் கொண்டே

இருக்கின்றன

பிணத்தின் மேல்

மாலையாக பூக்கள்.

காம்பை பிரிந்தும்

புன்னகையை

மறக்காது பூக்கள்

வேம்பில் மலர்ந்தும்

பூவில் தேனதை

மொய்க்கும் ஈக்கள்.

தேனை தேடும்

தேனியது சலிக்காது

புன்னகையில்

பூக்கள் என்றும்

இளைக்காது.

கூந்தலில் சூடினாலும்

வற்றாது வாசம்

மலர்களுக்கு

மரணமில்லை

நேசம் வீசும்.

பிறப்பில் நேசம்

இறப்பிலும் வாசம்

பூக்களுக்கே

சாத்தியம்.

இப்பூவுலகில்

பூக்கள்

புன்னகைக்கு

வைத்தியம்.

பூவிலங்கையான்