தாயின் பாசம்

தாயின் பாசம்

fallback-0

02 Aug 2026 - 6:31 am

1 mins read

அனுப்பாத கடிதம்

ராணுவத்தில் இறந்தவர்கள்

அவர்களிடம் கேட்டுப்பார்

அனுப்பாத கடிதத்தின் மகிமையை

கூச்சப்படும் காதலர்கள்

அவர்களிடம் கேட்டுப்பார்

அனுப்பாத கடிதத்தின் மகிமையை

வயதாகி இறந்தவர்கள்

அவர்களிடம் கேட்டுப்பார்

அனுப்பாத கடிதத்தின் மகிமையை

கண்களைப் பார்த்துப் பேசமுடியாத ஏக்கத்தை

தீர்க்கப் போராடுவது ஒரு கடிதம்

அதன் வரிகளின் ஆழம் அந்த இருவரைத் தவிர

வேறு யாருக்குப் புரியும்

தன் காதலைச் சொல்லத் தயங்கும்

இளைஞன் ஒருவனுக்குத் தெரியாது

அந்தத் தனிமையின் அர்த்தம்

ராணுவத்தில் நாட்டுக்காகப் போராடும் வீரனிடம் கேட்டுப்பார்

அதில் உள்ள முத்தங்களின் வலி தெரியும்

நீ சாப்பிட்டாயா என்று கேட்கத் தவிக்கும் ஒரு தாயின் பாசம்

அவர் இறக்கும்போது கேட்கும் கடைசி வார்த்தையின்போது

ஒரு மகனுக்குப் புரியும்

குமரன் யோஷிதா

குறிப்புச் சொற்கள்
கதை/கவிதைஞாயிறு முரசுமாணவர்கள்