வலிகளும் மௌனங்களும்

வலிகளும் மௌனங்களும்

1 mins read
b2638834-c548-4a1d-be01-e084beef8cbb
-

உள்ளுக்குள் பூட்டி வைத்த

வார்த்தைகளின் குவியல் அது

முகவரி தெரியாமல் இல்லை

முடிவை நினைத்து தான்

தயங்கி நின்றது பேனா

வலிகளும் மௌனங்களும்

மை வடிவில் காகிதத்தில்

அனுப்பாத கடிதம் என்றும்

அழகான ஒரு ரகசியம்

முகேஷ்

தொலைந்த முகவரி

முகவரி உன் கையில் இருந்தும்

உனக்கு அது தெரியாமல்

அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு

சிலை போல் நின்றுகொண்டு

தேடிய இடமெல்லாம் பொய்யென்று

தேடாத இடமெல்லாம் உண்மையென்று தெரிந்து

இறுதியில் தொலைந்தது

உன் முகவரி அன்று

அபிநயா

தொலைந்த முகவரி

எங்கே தேடியும் கிடைக்கவில்லை

தொலைந்திருந்த நான் பயம்கொண்டு அழுதேன்

அப்போது பேசிய தேவதையின் குரல்

என் உள்ளத்தில் தேன் வாற்றியது

அந்தத் தேவதை நம்பிக்கையை வைத்து

என் கண்களின் பாதையை மறைத்து

என் கண்களில் ஒரு புது பாதையைத் திறந்தது

துணிவுடன் அந்தப் பாதையை

கடந்து கண்டுபிடித்தேன்

என் தொலைந்த முகவரியை

என்னை வழிகாட்டிய தேவதையை

கட்டி அனைத்து கூறினேன்

அம்மா என்று

வி. லெஷாந்த்