புறப்படு

புறப்படு

1 mins read
6b5db8c2-2ce0-4401-8cda-5f2942bd80f6
-

இளைஞனே

எழுஞாயிறே

புறப்படு

முள்ளை

முல்லையால் எடு

எட்டுத திக்கும்

உன் திக்கே

ம்..புறப்படு

சொற்றுளிகளால்

பூக்கள் செதுக்கு

நெம்புகோல் நெஞ்சால்

உலகம் புரட்ட

ம்….புறப்படு

வலைகளில் சிக்காது

முத்துச்சிப்பிகள்

அலைகளின் ஆர்ப்பாட்டம்

ஆழத்தில் இல்லை

ம் ….புறப்படு

முகில்களை நகர்த்த

தென்றல் அறியும்

பாறையிலும் பாதை

வேர்கள் அறியும்

ம்…புறப்படு

பிடியில் உடும்பாகு

உச்சிவெயிலோ

கொட்டும் மழையோ

கொண்டாடும்

குருவியாகு

சருகின் கீழேயும்

குடும்பமாய் புழுக்கள்

எதிலும் உண்டு

ஏதோ ஒரு நீதி

ம்….புறப்படு

மதுவைத் தந்து

மகரந்தம் கடத்தும் பூ

எறிந்தாலும் நட்டாலும்

முளைக்கும் விதை

ம்… புறப்படு

புல்லே சிம்மாசனம்

பளித்துளிக்கு

நீ இருக்குமிடம்

அரசபீடம்

ம்.. புறப்படு

கருவை வளர்ப்பது

கடவுளின் நீதி

களத்தில் வெற்றி

கொள்கையின் வெற்றி

ம்…புறப்படு

சுழலும் உலகம்

சுழல்வாய் நீ

இரவுபகல் வெளியே

வெளிச்சம் உள்ளே

ம்….புறப்படு

அமீதாம்மாள்

குறிப்புச் சொற்கள்
அமிதாம்மாள்ரஜித்கவிதைகதைஞாயிறு முரசு