லதா
சாலை கடந்து ஓடுவதற்குள்
பிடித்துவிட்டது மழை
ஒளியக் குடையுமில்லை பக்கத்தில்
கூரைவேய்ந்த பாதையுமில்லை
மழைதானே என்ன செய்யப் போகிறது என்கிறாள்
தள்ளாடி நடக்கும் முதுபெண்
அவள் நனைந்திருப்பாள் ஆயிரம் மழை
முதல் மழை எல்லாருக்கும் ஒன்றா என்ன,
யாரும் பார்க்க எவரும் மழையில் கரைவதில்லை
மனமென வெடித்த மேகம்
நினைவெனக் கொட்டும் மழை
எங்குதான் ஒளிவீர் இறைவரே

