சிங்கப்பூர் 61

சிங்கப்பூர் 61

1 mins read
492edc37-8ce2-4341-98b9-400d337978c2
-
Google News Preferred Icon

எங்கும் வளர்ச்சி எதிலும் வளர்ச்சி

இதுவே இந்தச் சிங்கப்பூர்!

எங்கும் மணக்கும் இன்பத் தமிழோ

எழுச்சி யூட்டும் சிங்கப்பூர்!

வளரும் நாடுகள் வளமை சேர்க்க

வழிகள் சொல்லும் சிங்கப்பூர்!

முதியோர் வாழ முனைப்பு காட்டும்

முதிர்ந்த இந்தச் சிங்கப்பூர்!

நாட்டு மக்கள் நாட்டு நலனில்

காட்டும் பற்றுச் சிங்கப்பூர்!

கூட்டு முயற்சி நாட்டின் வளர்ச்சி

கூடி மகிழும் சிங்கப்பூர்!

வாட்ட மின்றி மக்கள் வாழ

காட்டும் அன்பே சிங்கப்பூர்!

ஊட்டும் அறிவால் உயர்ந்து நிற்கும்

உழைப்பின் சிகரம் சிங்கப்பூர்!

அறுபதைத் தாண்டியும் அரும்பெரும் வளர்ச்சி

இதுவே இந்தச் சிங்கப்பூர்!

அழகு தோற்றம் மெருகு ஏற்றும்

அனைத்து மான சிங்கப்பூர்!

அறிவைப் பெருக்கி ஆற்ற லாக்கும்

அதிசய தேசம் சிங்கப்பூர்!

அமைதி விரும்பும் அகிலம் போற்றும்

அன்பின் வடிவே சிங்கப்பூர்!

சீர்காழி உ செல்வராஜு

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்