ஒன்றாகக் கூடியே ஊக்கத்தோடு உழைப்போம்
நன்றாகத் திட்டமிட்டு வெற்றிகள் பல குவிப்போம்
குன்றாத வளத்துடன் எந்நாளும் நாம் உயர்வோம்
கன்றாத சிங்கை புகழ் திசையெலாம் பரப்புவோம்
பண்போடு பல் இனப் பண்பாட்டையே காப்போம்
கண்ணோடு இணை எனத் தாய்நாடு போற்றுவோம்
சிங்கார நாட்டிற்கு மேன்மேலும் சிறப்பு சேர்ப்போம்
மங்காத புகழுடன் பார் முழுதும் மிளிர பாடுபடுவோம்
காலம் வியக்கும் வண்ணம் உயர்ந்த சிங்கப்பூர்
ஞாலம் போற்றிடும் நற்புகழ் கொண்ட சிங்கப்பூர்
கோலம் பசுமையாய்த் தீட்டிட மின்னும் சிங்கப்பூர்
சீலம் குறையாத நேர்மை மிகுந்த நல் சிங்கப்பூர்
வாழிய! வாழிய! சிங்கைத் திருநாடே! வாழியவே!
திருஉறையோன்


