வாழியவே!

வாழியவே!

1 mins read
7b09f687-a48f-4a1f-9b71-324c3476c5d7
-
Google News Preferred Icon

ஒன்றாகக் கூடியே ஊக்கத்தோடு உழைப்போம்

நன்றாகத் திட்டமிட்டு வெற்றிகள் பல குவிப்போம்

குன்றாத வளத்துடன் எந்நாளும் நாம் உயர்வோம்

கன்றாத சிங்கை புகழ் திசையெலாம் பரப்புவோம்

பண்போடு பல் இனப் பண்பாட்டையே காப்போம் 

கண்ணோடு இணை எனத் தாய்நாடு போற்றுவோம்

சிங்கார நாட்டிற்கு மேன்மேலும் சிறப்பு சேர்ப்போம் 

மங்காத புகழுடன் பார் முழுதும் மிளிர பாடுபடுவோம்

காலம் வியக்கும் வண்ணம் உயர்ந்த சிங்கப்பூர்

ஞாலம் போற்றிடும் நற்புகழ் கொண்ட சிங்கப்பூர்

கோலம் பசுமையாய்த் தீட்டிட மின்னும் சிங்கப்பூர்

சீலம் குறையாத நேர்மை மிகுந்த நல் சிங்கப்பூர்

வாழிய! வாழிய! சிங்கைத் திருநாடே! வாழியவே! 

திருஉறையோன்

குறிப்புச் சொற்கள்
கவிதைகதை/கவிதைஞாயிறு முரசுதேசிய நாள் கவிதைகள்