இயற்கை செல்வங்களாய்
எதையும் தரவில்லை...
எங்கேயும் படையெடுத்து
வளம்சுரண்டி வரவில்லை..
தண்ணீர்த் தேவைக்கு
அறிவார்ந்த
தொழில்நுட்பம்..
உலகளாவிய
விலையேற்றம்
புகைபோல மூச்சுமுட்டும்..
என்றாலும்
பொருளியலில் இறங்காத வளர்பிறையே..
சோதனை சலசலப்புக்கு சோர்ந்து
புலம்புவதில்லை..
சூறாவளிகளுக்குக் கூட
வீழ்ந்து போவதில்லை..
எதையும் எதிர்கொள்ளும்
துணிவின் சின்னம்..
வியர்வையால் விளைந்த
உழைப்பின் சிகரம் - நம்
சிங்கை நகரம்!
பனசை நடராஜன்


