சிங்கை

சிங்கை

1 mins read
feb34f13-84d9-4221-9aaa-052ab6a34dc0
-
Google News Preferred Icon

இரா சத்திக்கண்ணன்

பூமித்தாயின்

சிவப்பு நெற்றிப்பொட்டு

அமைதி இசைமீட்டும்

நல்லதோர் வீணை

ஆசியச் சந்தையின்

கலங்கரை விளக்கம்

அறிவியலின் இழைகளால்

நெய்யப்பட்ட நவீனக்கவிதை

பசுமைத்தீவெங்கும்

விண்முட்டும் விந்தைகள்

செயற்கை நுண்ணறிவில்

செதுக்கிய மின்னியல் தேசம்

லீ குவான் யூ

ஏற்றிவைத்த அணையா தீபம்

பல்லினச் சமூக வேர்களில்

பூத்திட்ட திருநாடு

தோள்கொடுப்போம்! முன்னேறுவோம்!

குறிப்புச் சொற்கள்
கவிதைதேசிய நாள் கவிதைகள்தேசிய தினம் 2026